தெலங்கானாவிலும் காலை உணவுத்திட்டம் -
தெலங்கானாவிலும் காலை உணவுத்திட்டம் - முகநூல்

தமிழ்நாட்டை போலவே தெலங்கானாவிலும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்! எப்போது தொடங்குகிறது தெரியுமா?

அக்டோபர் 24 முதல் தசரா பரிசாக, தெலங்கானாவிலும் ‘முதல்வரின் காலை உணவுத்திட்டம்’ தொடங்கப்பட உள்ளது. இதனை அம்மாநில முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் என்ற பெயரில் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு அனைத்துப் பள்ளி நாள்களிலும் சத்தான சிற்றுண்டிக்கு வழிவகை செய்யப்பட்டது.

தெலங்கானாவிலும் காலை உணவுத்திட்டம் -
தமிழ்நாடு வழியில் தெலங்கானா.. ஸ்டாலின் பேசிய அதே நாளில்... அறிவிப்பு வெளியிட்ட தெலங்கானா அரசு

முதலில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளிலும், தொலைதூரக் கிராமங்களில் உள்ள பள்ளிகளிலும் இத்திட்டமானது தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று முதல்வர் கூறியிருந்தார்.

முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் - தமிழ்நாடு
முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் - தமிழ்நாடுமுகநூல்

அதன்படி கடந்தாண்டு செப். மாதம் இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி தமிழ்நாடு முழுவதும் இருக்கும் அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. பல தரப்பிலிருந்தும் இத்திட்டம் வரவேற்பை பெற்ற நிலையில், கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி தெலங்கானா அதிகாரிகள் குழு சென்னை வந்து இத்திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது என ஆய்வு செய்தது. திட்டத்தின் நடைமுறை குறித்து ஆய்வு செய்துவிட்டு, தங்கள் மாநிலத்திலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தது.

தெலங்கானாவிலும் காலை உணவுத்திட்டம் -
குழந்தைகளுக்கு சத்தான காலை உணவு எவ்வளவு முக்கியம்? தவிர்த்தால் என்ன ஆகும்? - இது ’Breakfast' ஆலோசனை!

இந்நிலையில் தமிழ்நாட்டை தொடர்ந்து தமிழ்நாட்டை போலவே தெலங்கானாவிலும் அக்டோபர் 24 முதல் தசரா பரிசாக, “முதல்வரின் காலை உணவுத் திட்டம்” தொடங்கப்படும் என்று தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் தினமும் காலை 9:30 மணி அளவில் பள்ளி மாணவ - மாணவிகளுக்கு உணவானது வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இத்திட்டம் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைப்பாட்டை சரிசெய்யும் வகையிலும், மாணவர்கள் பள்ளிக்கு வர ஊக்குவிக்கும் வகையிலும், உணவு இல்லை என்பதற்காக கல்வி தடைபடுவதை தவிர்க்கும் வகையிலும் துவங்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் காலை உணவு மெனு என்னவென்று பார்க்கலாம்....

  • திங்கள்கிழமை - கோதுமை ரவா உப்மா, சட்னி

  • செவ்வாய்கிழமை - சாதம் ரவா கிச்சடி, சட்னி

  • புதன் - பாம்பே ரவா உப்மா, சாம்பார்

  • வியாழன் - ரவா பொங்கல், சாம்பார்

  • வெள்ளி - தினை ரவா கிச்சடி, சாம்பார்

  • சனிக்கிழமை - கோதுமை ரவா கிச்சடி, சாம்பார்

    போன்றவையாகும்.

தெலங்கானா முதல்வரின் இக்காலை உணவுத் திட்டத்தின் மூலமாக அம்மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மாதிரிப் பள்ளிகள் என்று மொத்தம் 23,05,801 மாணவர்கள் பயனடைய உள்ளனர்.

தமிழ்நாட்டை தொடர்ந்து தமிழ்நாட்டை போலவே இத்தகைய நல்ல திட்டங்கள் அண்டை மாநிலங்களிலும் செயல்படுத்தபடுவது, மிகவும் வரவேற்கதக்க விஷயமென குழந்தை செயற்பாட்டாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com