இந்தியாவின் இளம் வயது உடல் உறுப்பு தான கொடையாளரான 20 மாத குழந்தை! உருக்கமான சம்பவம்
இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள ரோஹினி பகுதியில் வசித்து வரும் ஆஷிஷ் குமார் தம்பதி, பிறந்து 20 மாதமான தங்களது பெண் குழந்தை ‘தனிஷ்தா’-வை அங்குள்ள ஸ்ரீ கங்காராம் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக கடந்த 8 ஆம் தேதி சேர்த்துள்ளனர். அன்று மாலை குழந்தை வீட்டின் பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்த போது தவறுதலாக தவறி மேல் தளத்தில் இருந்து விழுந்துள்ளது.

குழந்தையை பரிசோத்தித்த மருத்துவர்கள் கடந்த 11 ஆம் தேதியன்று அவள் மூளை சாவு அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
“மருத்துவர்கள் அதை சொன்னதும் எனக்கு உயிரே போய்விட்டது. அதே நேரத்தில் அவள் ஐசியூவில் இருந்த போது சக பெற்றோர்கள் அவர்கள் குழந்தைக்கு தேவைப்படும் உடல் உறுப்புகள் குறித்து சொல்லியிருந்தனர். அதனால் அவளது உடலை மண்னில் புதைப்பதை காட்டிலும் உறுப்புகள் தேவைப்படுவோரின் உடலில் பொறுத்தலாம் என முடிவு செய்தேன். மருத்துவர்களிடம் இதை சொன்னதும் எனது குழந்தையின் உறுப்புகளை அவள் அனுமதிக்கப்பட்டிருந்த மருந்துவமனையிலேயே அறுவை சிகிச்சை செய்தனர். இப்போது அதன் மூலம் 5 பேர் உயிர்பிழைத்துள்ளனர்” குழந்தையின் தந்தை ஆஷிஷ் குமார்.

இதயம், கல்லீரல், சிறுநீரகம், கருவிழிப்படலம் முதலியவை குழந்தையிடமிருந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அந்த உறுப்புகள் தேவைப்பட்டவர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளது.