பிரமோஸ் ஏவுகணை வியட்நாமிற்கு விற்கப்பட்டதா? - பரபரப்பு புகார்

பிரமோஸ் ஏவுகணை வியட்நாமிற்கு விற்கப்பட்டதா? - பரபரப்பு புகார்
பிரமோஸ் ஏவுகணை வியட்நாமிற்கு விற்கப்பட்டதா? - பரபரப்பு புகார்

வியட்நாம் நாட்டுக்கு பிரமோஸ் ஏவுகணையை இந்தியா விற்றதாக வெளியான செய்திகள் பொய்யானவை என இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

தென்சீனக் கடல் பகுதியில் உள்ள சில தீவுகளை சொந்தம் கொண்டாடுவதில் பிலிப்பைன்ஸ், வியட்நாம், சீனா ஆகிய நாடுகளுக்கிடையே பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. இப்பிரச்சனை தொடர்பாக சர்வதேச தீர்ப்பாயத்தில் சில வழக்குகளும் நிலுவையில் உள்ளது. டோக்லாம் பகுதியில் இந்தியா மற்றும் சீனா இடையேயான பிரச்சனைகளை தொடர்ந்து, வியட்நாம் நாட்டிற்கு இந்தியா ஆதரவளித்து வருவதாக ஒரு செய்தி பரவியது. மேலும், வியட்நாமிற்கு இந்தியா - ரஷ்யா கூட்டு முயற்சியினால் உருவாக்கப்பட்ட பிரமோஸ் ரக கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை இந்தியா விற்றுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், இந்த செய்தியை இந்தியா மறுத்துள்ளது. இதுதொடர்பாக இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார், “வியட்நாம் நாட்டுக்கு பிரமோஸ் ஏவுகணை விற்றதாக வெளியான செய்தி பொய்யானது என கூறினார். "இது சரியானது அல்ல. இந்த செய்தியை அமைச்சகம் ஏற்கெனவே நிராகரித்துவிட்டது, தற்போது வெளியான செய்தி தவறானது", என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த வியட்நாம் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர், “பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்வது தேசிய பாதுகாப்பிற்கான சாதாரண நடைமுறை ஆகும். இருப்பினும், இந்த கேள்வியை தகுந்த துறையினரிடம் அனுப்புவோம். வர்த்தகம், முதலீடு, பொருளாதாரம், கலாச்சாரம், கல்வி, பாதுகாப்பு போன்ற பல துறைகளில் இந்தியாவுடன் இணைந்து வியட்நாம் செயல்பட்டு வருகிறது", என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com