'கோயிலுக்குள் முத்தக்காட்சி' - நெட்ஃபிளிக்ஸுக்கு எதிராக ட்விட்டரில் ட்ரெண்டிங்!

'கோயிலுக்குள் முத்தக்காட்சி' - நெட்ஃபிளிக்ஸுக்கு எதிராக ட்விட்டரில் ட்ரெண்டிங்!

'கோயிலுக்குள் முத்தக்காட்சி' - நெட்ஃபிளிக்ஸுக்கு எதிராக ட்விட்டரில் ட்ரெண்டிங்!
Published on

ட்விட்டரில் #BoycottNetflix என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

நெட்ஃபிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களில் பல வெப் சீரிஸ் வெளியாகி வருகின்றன. ஓடிடி தளங்களில் வெளியாகும் வெப் சீரிஸ், படங்களுக்கு தணிக்கை இல்லை என்பதால் பல காட்சிகள் நேரடியாகவே வைக்கப்படுகின்றன. தணிக்கை இல்லை என்பதால் அதிக ஆபாசக் காட்சிகள் இடம்பெறுவதாகவும் எனவே தணிக்கை அவசியம் என்ற பேச்சும் அவ்வப்போது எழுந்துகொண்டே இருக்கிறது. இந்நிலையில் மதம், சமூகம் சார்ந்த விவகாரங்களை தவறாக சித்தரிப்பதாக இணையவாசிகள் இடையே ஓடிடி தளங்கள் அவ்வப்போது சிக்கிக்கொள்வதும் உண்டு. தற்போது அதேபோல் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது நெட்ஃபிளிக்ஸ்.

A Suitable Boy என்ற வெப்சீரிஸ் காரணமாக சிக்கலில் மாட்டியுள்ளது நெட்ஃபிளிக்ஸ். இந்து பெண்ணும், இஸ்லாமிய இளைஞரும் கோயில் ஒன்றில் முத்தமிட்டுக் கொள்வதை போன்ற காட்சி A Suitable Boy வெப்சீரிஸில் இடம்பெற்றுள்ளது. இந்தக்காட்சிக்கு பலரும் இணையத்தில் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். இந்து மதத்தை அவமதிப்பாக அந்தக்காட்சி எடுக்கப்பட்டுள்ளதாகவும், லவ் ஜிகாத்தை அடிப்படையாகக் கொண்டு அந்தக்காட்சி இருப்பதாகவும் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். ட்விட்டரில் #BoycottNetflix என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

சமீபத்தில் தனிஷ்க் நகைக்கடை விளம்பரத்தில் இந்துமத கர்ப்பிணி பெண்ணுக்கு அவரது இஸ்லாமிய மாமியார் வளைகாப்பு நடத்துவதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ‘இது லவ் ஜிகாத்தை ஊக்குவிப்பதுபோல் இருக்கிறது’என்று சிலர் கண்டனம் தெரிவித்தார்கள். அதனைத் தொடர்ந்து ட்விட்டரில் ‘boycott tanishq’ என்ற ஹேஷ்டக் ட்ரெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com