வெள்ளாடு முட்டி மாணவன் உயிரிழப்பு!

வெள்ளாடு முட்டி மாணவன் உயிரிழப்பு!
வெள்ளாடு முட்டி மாணவன் உயிரிழப்பு!

வெள்ளாடு முட்டி மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மும்பை, விக்ரோலி அருகில் உள்ள இஸ்லாம்புரா பகுதியைச் சேர்ந்தவர் லியாகத் அலி. டெய்லர். இவர் மகன் சிர்தாஜ் அலி, உத்தரபிரதேசத்தில் உறவினர் வீட்டில் இருந்து ஆறாம் வகுப்பு படித்துவருகிறான். கோடை விடுமுறையில் அப்பா, அம்மாவை பார்ப்பதற்காக ஏப்ரல் இறுதியில் மும்பை வந்தான். 

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை லியாகத்தும் அவர் மனைவியும் வெளியே சென்றுவிட்டனர். வீட்டுக்கு வெளியே நின்று விளையாடி கொண்டிருந்தான் சிர்தாஜ். அப்போது அங்கிருந்த வெள்ளாடு ஒன்று சிர்தாஜ் அலியை, பயங்கரமாக முட்டியது. இதில் படுகாயமடைந்த சிறுவனை, மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான் சிர்தாஜ்.

இதையடுத்து, கொதித்து எழுந்த சிர்தாஜின் உறவினர்கள், வெள்ளாடு வளர்ப்பவரை கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து அவர்கள் கலந்துசென்றனர்.

இதுபற்றி சிர்தாஜின் தந்தை லியாகத் கூறும்போது, ’’விடுமுறையில் என் மகன் ஆசையாக இங்கு வந்தான். ஆனால், இப்படியொரு சம்பவம் எங்கள் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது’’ என்றார். 

அந்தப் பகுதியை சேர்ந்த ஒருவர் கூறும்போது, ‘’இது முதன் முறையல்ல. இந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களை வெள்ளாடு முட்டித்தள்ளுவது தொடர்கதையாக நடந்து வருகிறது. பல சிறுவர்கள் காயமடைந்துள்ளனர். ஆனால், உயிரிழப்பு வரை சென்றது இதுதான் முதன் முறை. ஆடு வளர்ப்பவர் அதை கட்டிப்போட்டு வளர்க்காததால்தான் இது போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. போலீசார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

வெள்ளாடு முட்டி மாணவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com