உத்தர பிரதேசத்தில் பதிவான கஸ்டடி மரணம்

உத்தர பிரதேசத்தில் பதிவான கஸ்டடி மரணம்
உத்தர பிரதேசத்தில் பதிவான கஸ்டடி மரணம்

கொரோனா ஊரடங்கை மதிக்கவில்லை எனக்கூறி கைது செய்யப்பட்ட 17 வயது உத்தர பிரதேச சிறுவன், காவல் நிலையத்தில் கஸ்டடியில் இருக்கும்போது இறந்திருக்கிறார். கஸ்டடியின்போது காவல்துறையினர் சிறுவனை மோசமாக தாக்கியதுதான், சிறுவனின் மரணத்துக்கு காரணம் எனக் கூறி, பணியிலிருந்த இரண்டு காண்ஸ்டபிள் மற்றும் ஒரு வீட்டுக்காவலர், பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

உ.பி. மாநிலத்திலுள்ள உன்னாவ் மாவட்டத்திலுள்ள பாத்புரி பகுதியில், இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இவர், காய்கறி விற்பனைக்காக வீட்டைவிட்டு வெளியே சென்றதாக கூறப்படுகிறது. அப்போது வழியிலிருந்த காவலர்கள், அவரை வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு அவர் கடுமையாக தாக்கப்பட்டும் இருக்கின்றார்.

அதைத்தொடர்ந்து சிறுவன் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறார். நிலை மிக மோசமான பிறகு, அருகிலிருந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அவரை அழைத்துச் சென்றிருக்கின்றனர். செய்தி அறிந்து குடும்பத்தினர் அங்கு வருவதற்குள், அவர் இறந்துவிட்டதாக உறுதிசெய்யப்பட்டுவிட்டது.

செய்தி அறிந்ததும் ஊர் மக்கள் காவலர்களுக்கு எதிராக அணி திரண்டு போராடத்  தொடங்கிவிட்டனர். இறந்த சிறுவனின் வீட்டிலுள்ள ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை அவர்கள் வைத்திருக்கின்றனர்.

மக்கள் போராட்டத்தை தொடர்ந்துதான் காவலர்கள் மீதான நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிவிப்பு வெளியானது.

உ.பி.யில்., மே 24ம் தேதி வரை ஊரடங்கு போடப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், மாரடைப்பால் இறந்ததாகத்தான் முதலில் காலவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். கொரோனா ஊரடங்கு விதி மீறலால் கைது செய்யப்பட்ட இவர், மிக மோசமாக தாக்கப்பட்டதால்தான் இறந்திருக்கிறார் என அவரின் குடும்பத்தினர் கூறிவருகின்றனர். குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது எனக்கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் இது கஸ்டடி கொலை என்பது உறுதிசெய்யப்படவில்லை என்றும், “பிரேத பரிசோதனைக்குப் பிறகே, அதை அடிப்படையாக வைத்தே முடிவுகள் எடுக்கப்படும்” என உன்னாவ்வின் தலைமை கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.

தகவல் உறுதுணை : Indian Express, NDTV

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com