எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
பல்வேறு பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
கூட்டத் தொடரில் பங்கேற்கும் முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் அனைத்து விவகாரங்கள் குறித்தும் பேச வாய்ப்பு தரப்படும் என்றும் அவையை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா பேரிடர் குறித்து விரிவான விவாதத்தை அவைக்கு உள்ளேயும் வெளியேயும் நடத்த அரசு விரும்புவதாகவும் பிரதமர் தெரிவித்தார். நாடாளுமன்றத் தொடர் தொடங்கும் முன்பாக அவர் இவ்வாறு பேசினார். நாடாளுமன்றத்தின் வெளியே பிரதமர் பேசும் போது மழை பெய்ததால் அவர் குடைபிடித்தவாறே பேசினார்.
இதனிடையே, நாடாளுமன்றத்தில் பல்வேறு பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.