இரு நாட்டு படைகளும் பின்வாங்க மறுப்பதால் எல்லையில் தொடர்ந்து பதற்றம்

இரு நாட்டு படைகளும் பின்வாங்க மறுப்பதால் எல்லையில் தொடர்ந்து பதற்றம்
இரு நாட்டு படைகளும் பின்வாங்க மறுப்பதால் எல்லையில் தொடர்ந்து பதற்றம்

சிக்கிம் எல்லையில் சீனப் படைகள் பின்வாங்கும் வரை இந்திய படைகளும் திரும்பப்பெறப்பட மாட்டாது என உறுதிபடத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரச்னைக்குரிய எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் கூடாரங்களை அமைத்து தங்கி கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம், சீனாவின் அழுத்ததிற்கு இந்தியா அடிபணியாது என்று ராணுவம் கூறியுள்ளது. அதேவேளையில், தூதரக ரீதியில் பிரச்னைக்கு தீர்வு காண இந்தியா தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால், எல்லையில் இருந்து இந்திய படைகள் திரும்பப்பெறப்படும் வரை சமரசப்பேச்சுக்கு இடமில்லை என்று சீனா குறிப்பிட்டுள்ளது. இதனால் எல்லையில் பதற்றமான நிலையே தொடர்ந்து காணப்படுகிறது. சிக்கிம் மாநிலத்தில் இந்தியா-பூட்டான்-சீனா எல்லைகளை இணைக்கும் டோக்லாம் என்ற பகுதியில் சீனா மேற்கொண்ட சாலை கட்டமைப்பு பணிகளை இந்திய ராணுவம் தடுத்தது. இதைத் தொடர்ந்து இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com