வெடிகுண்டு மிரட்டல்
வெடிகுண்டு மிரட்டல்முகநூல்

தொடரும் விமான நிறுவனங்களுக்கான வெடிகுண்டு மிரட்டல்.. விசாரணையை தீவிரப்படுத்தும் புலனாய்வு முகமைகள்

விமான நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக புலனாய்வு முகமைகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளன.
Published on

நாடு முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்களுக்கு சமூகவலைத்தளங்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டன. விசாரணையில் மிரட்டல் விடுக்கப்பட்ட அனைத்து சமூக வலைதள கணக்குகளும் போலியானவை என தெரியவந்தது.

விமானம்
விமானம்

தற்போது இந்த விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்துள்ள புலனாய்வு முகமை அதிகாரிகள், சந்தேகத்தின் பேரில், ஒரு சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அதில், அதிநவீன சைபர் நெட்வொர்க்கில் செயல்படும் கும்பலால், ஒரே நபர் மிரட்டல் செய்தியை பரப்பி இருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

வெடிகுண்டு மிரட்டல்
மகாராஷ்டிரா: தொகுதிப்பங்கீட்டில் இழுபறி.. பாஜக கூட்டணியில் குழப்பம்.. ஸ்டெடியாக எதிர்க்கட்சியினர்..

சைபர் கிரிமினல் கும்பல் அல்லது வெவ்வேறு நபர்கள் புதிய பயனர் ஐடியை உருவாக்கி, ஐ.பி. முகவரிகளை மாற்றுகிறார்கள் என்றும், குற்றவாளிகளை பிடிப்பதற்கான முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டிருப்பதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com