இந்தியா
ஜம்மு காஷ்மீரில் வெடிகுண்டு தாக்குதல்: 4 காவலர்கள் உயிரிழப்பு
ஜம்மு காஷ்மீரில் வெடிகுண்டு தாக்குதல்: 4 காவலர்கள் உயிரிழப்பு
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் வெடிகுண்டு தாக்குதலில் காவலர்கள் 4 பேர் உயிரிழந்தனர். அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் சிலர் வெடிகுண்டு தாக்குதலை நிகழ்த்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.
சோபூர் பகுதியில் நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதலில், இர்ஷாத் அகமத், முகமத் அமின், குலாம் நபி உள்ளிட்ட 4 காவலர்கள் உயிரிழந்தனர். மேலும் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். வெடிகுண்டு தாக்குதலில் சோபூர் மார்க்கெட் பகுதியில் உள்ள 3 கடைகள் சேதமடைந்தன.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து , பாரமுல்லா பகுதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் யாரேனும் சோபூர் பகுதியில் பதுங்கியுள்ளார்களா என தேடுதல் வேட்டையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.