பாலிவுட் பிரபலங்கள் ஷாரூக் கான், கத்ரீனா கைஃப் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி?

பாலிவுட் பிரபலங்கள் ஷாரூக் கான், கத்ரீனா கைஃப் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி?

பாலிவுட் பிரபலங்கள் ஷாரூக் கான், கத்ரீனா கைஃப் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி?
Published on

பாலிவுட் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் ஷாரூக் கானுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்-க்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கத்ரீனா ஏற்கனவே வீட்டுத் தனிமையில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கத்ரீனாவின் கணவர் விக்கி கௌசலிற்கு ஐஃபா விருதுகள் விழாவில் சர்தார் உத்தம் படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட உள்ளது. தற்போது கத்ரீனாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால் விருது விழாவில் அவர் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்த ஷாருக்கானுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில், ஷாருக்கானுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் ஷாரூக் கான் தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com