டெல்லி | சூட்கேஸில் எரிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் - போலீஸ் விசாரணையில் சிக்கிய குற்றவாளி
டெல்லிக்கு அருகில் உள்ள காஜிபூரில் வெறிச்சோடிய பகுதி ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான வகையில் கிடந்த சூட்கேஸில் எரிக்கப்பட்ட பெண் உடல் ஒன்று இருந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று அதிகாலை, கிழக்கு டெல்லியின் காஜிபூரில் உள்ள வெறிச்சோடிய பகுதியில் சூட்கேஸ் ஒன்று இருந்துள்ளதைக்கண்ட அப்பகுதி மக்கள் போலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த போலிசார் சூட்கேஸை சோதனையிட்ட போது, அதில் எரிந்த நிலையில் பெண் உடல் ஒன்று இருந்ததைக்கண்டு அதிர்ந்த போலிசார் வழக்கைப்பற்றி துப்புதுலக்க ஆரம்பித்தனர்.
வழக்கின் ஆரம்பத்தில் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேரமா உதவியால், சோதனை செய்தபோது, சந்தேகத்திற்கிடமான வகையில் ஹூண்டாய் வெர்னா கார் ஒன்று அப்பகுதியில் வந்து சென்றது. இந்த துப்பை அடிப்படையாகக்கொண்டு போலிசார் அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்தனர். அந்த கார் எண்ணைக்கொண்டு வழக்கை விசாரிக்கையில். அந்த காரானது அமித் திவாரி என்பவருக்கு சொந்தமானது என்பதை போலிசார் கண்டுபிடித்தனர்.
அவரை பிடித்து விசாரிக்கையில் அவர் ஜாஜியாபாத்தில் கால்டாக்ஸி ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரும் இவரது நண்பனான அனுஜ் என்பவரும் இணைந்து இக்கொலையை செய்ததாக தெரியவந்தது. போலிசார் இவர்களை கைது செய்து விசாரிக்கையில், கொலைக்காண காரணம் தெரியவந்துள்ளது.
அமித் திவாரியின் உறவுக்கார பெண் 22 வயதான ஷில்பா பாண்டே. இவர் சூரத்தை சேர்ந்தவர். ஷில்பாவுக்கும் அமித் திவாரிக்கும் பழக்கம் ஏற்பட்டு பிறகு காதலாக மாறியுள்ளது. இருவரும் கடந்த ஒரு வருடமாக திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் ஷில்பா தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு அமித் திவாரியை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அமித்திவாரி ஷில்பாவிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள நினைத்து அவரை திருமணம் செய்ய மறுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவ தினத்தன்று அமித்திவாரி குடிபோதையில் ஷில்பாவிடம் தகறாரில் ஈடுபட்டுள்ளார். இருவருக்குள்ளும் வாக்குவாதம் முற்றவே, ஆத்திரத்தில் அமித்திவாரி ஷில்பாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பிறகு ஷில்பாவின் உடலை மறைக்க நினைத்த அமித்திவாரி தனது நண்பனான அனுஜை அழைத்துள்ளார். அனுஜும் அமித்திவாரி இருவரும் ஷில்பாவின் உடலை ஒரு சூட்கேஸில் வைத்து காரில் கொண்டு சென்றுள்ளனர். போகும் வழியில் இருக்கும் ஒரு பெட்ரோல் பங்கில் ரூ.160 க்கு டீசல் வாங்கிக்கொண்டவர்கள், ஆளரவமற்ற வெறிச்சோடிய இடத்திற்கு வந்து, ஷில்பாவின் உடலை டீசல் ஊற்றி எரித்துள்ளனர்.