இந்தியா
பனிச்சரிவில் சிக்கிய ராணுவ வீரர்களின் உடல்கள் மீட்பு
பனிச்சரிவில் சிக்கிய ராணுவ வீரர்களின் உடல்கள் மீட்பு
ஜம்மு காஷ்மீரில் ஒரு வாரத்திற்கு முன்பு பனிச்சரிவில் சிக்கிய மூன்று ராணுவ வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பனிப்பொழிவு கடுமையாகியுள்ளது. இதன் காரணமாக ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி, கடந்த 12ஆம் தேதி குப்வாரா மாவட்டத்தில் இரண்டு வீரர்களும் பந்திபோரா மாவட்டத்தில் மூன்று வீரர்களும் காணாமல் போயினர். அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் மூவரின் உடல்களும் நேற்று மீட்கப்பட்டதாக ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய இரண்டு வீரர்களைத் தேடும் பணி தொடர்வதாகவும் ராணுவம் கூறியுள்ளது.