\
13 பேரில் உடல்கள் டெல்லி கொண்டுவரப்பட்டன - நாளை இறுதி சடங்கு

13 பேரில் உடல்கள் டெல்லி கொண்டுவரப்பட்டன - நாளை இறுதி சடங்கு

13 பேரில் உடல்கள் டெல்லி கொண்டுவரப்பட்டன - நாளை இறுதி சடங்கு
Published on

நாளை இறுதி சடங்கு நடைபெற உள்ள நிலையில், தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்கள் விமானம் மூலம் டெல்லி கொண்டு வரப்பட்டன. 

சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ராணுவ விமானம் மூலம் பிபின் ராவத் உள்ளிட்ட 13 வீரர்களின் உடல்கள் டெல்லி கொண்டுவரப்பட்டன. தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோரின் உடல்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்த உள்ளார். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இணை அமைச்சர் அஜய் பட் உள்ளிட்டோரும் மறைந்த ராணுவ வீரர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர்.

நாளை காலை இறுதி அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. அதனைத்தொடர்ந்து, முழு அரசு மரியாதையுடன் ராணுவ வீரர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட உள்ளன. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com