மீன்பிடிக்க சென்ற விசைப்படகு நடுக்கடலில் பற்றி எரிந்தது

மீன்பிடிக்க சென்ற விசைப்படகு நடுக்கடலில் பற்றி எரிந்தது

மீன்பிடிக்க சென்ற விசைப்படகு நடுக்கடலில் பற்றி எரிந்தது
Published on

சென்னை காசிமேட்டில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகு ஒன்று நடுக்கடலி‌ல் தீப்பற்றி எரிந்தது.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு சென்னை காசிமேட்டிலிருந்து உதயகுமார் என்பவரின் படகில் 9 பேர் ஆந்திர மாநிலம் விசாகபட்டினம் அருகே மீன் பிடிக்க சென்றனர். அப்போது நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது விசைப்படகிலிருந்து திடீரென சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் படகில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் காயமடைந்தனர். இதில் படகில் தண்ணீர் புகுந்ததில் படகு மூழ்கும் நிலை ஏற்பட்டது. உடனடியாக இந்திய கடலோர கப்பல் படையினர் மீனவர்களை காப்பாற்றினர். இதில் படகு முழுவதுமாக சேதமடைந்தது. சுமார் 50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் என கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com