\
ஏரியில் படகு கவிழ்ந்து 11 பேர் உயிரிழப்பு!

ஏரியில் படகு கவிழ்ந்து 11 பேர் உயிரிழப்பு!

ஏரியில் படகு கவிழ்ந்து 11 பேர் உயிரிழப்பு!
Published on

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இன்று அதிகாலை படகு கவிழ்ந்த விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள கட்லாபுரா பகுதியில் உள்ள ஏரியில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு விநாயகர் சிலையை கரைக்க சிலர் படகில் சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக படகு ஏரியில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த 11 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.  சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மற்றும் நீச்சல் வீரர்கள் அங்கு மீட்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். 

‘’11 பேர் உடல்களை இதுவரை மீட்டுள்ளோம். 5 பேர் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.  மேலும் பலர் நீரில் மூழ்கி விட்டதாக உள்ளூர்க்காரர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது’’ என்று தெரிவித்துள்ளார் கூடுதல் எஸ்.பி, அகில் படேல்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அம்மாநில அமைச்சர் பிசி சர்மா தெரிவித் துள்ளார்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com