கங்கையாற்றில் படகு கவிழ்ந்து விபத்து... 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
பீகார் தலைநகர் பாட்னாவில் கங்கையாற்றில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
மகர சங்கராந்தியை ஒட்டி சபல்பூரில் நடைபெற்ற பட்டம் விடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர், நாட்டு படகு ஒன்றில் 40-க்கும் அதிகமானோர் கங்கையாற்றை கடந்தபோது அதிக சுமை காரணமாக படகு கவிழ்ந்ததாக தெரிகிறது. இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டிருப்பதாக பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் பிரத்யேய் அம்ரித் தெரிவித்துள்ளார்.
படகு கவிழ்ந்ததும் ஒரு சிலர் நீந்தி கரை சேர்ந்துள்ளனர். மேலும் மருத்துவமனையில் 9 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பீகாரில் அவர் கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியும், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.