ப்ளூவேல் விளையாட்டால் மேலும் ஒரு மாணவர் தற்கொலை

ப்ளூவேல் விளையாட்டால் மேலும் ஒரு மாணவர் தற்கொலை

ப்ளூவேல் விளையாட்டால் மேலும் ஒரு மாணவர் தற்கொலை
Published on

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் முதுகலை உடற்கல்வியியல் படிப்பை பயின்று வந்த அசாம் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வடமாநிலங்களில் சில உயிர்களை பறித்த ப்ளூவேல் விளையாட்டு தமிழகத்திலும் ஊடுருவி புதுச்சேரியை சேர்ந்த மேலும் ஒரு உயிரை பறித்துள்ளது. புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் சசிகாந்த் போரா கடைசியாக கைப்பேசியில் ப்ளூவேல் விளையாடியதற்கான ஆதாரங்கள் இருப்பதால், அதை விளையாடி தற்கொலை செய்தாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்‌. சசிகாந்த் போரா ஒன்றரை மாதத்துக்கு முன்புதான் பல்கலைக்கழகத்தில் சேர்ந்ததாகவும், அவர் சமீபகாலமாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அவருடைய நண்பர்கள் கூறுகின்றனர். பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள மாணவர் சசிகாந்த் போராவின்  உடலில் ஏதேனும் காயங்கள், அடையாளங்கள் உள்ளனவா என காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். தற்போதுவரை வெளிப்புற காயங்கள் ஏதும் இல்லை எனக்கூறப்படுகிறது. நேற்று மதுரையில் 19 வயது கல்லூரி மாணவர் விக்னேஷ் ப்ளூவேல் விளையாடி தற்கொலை செய்து கொண்ட நிலையில், புதுச்சேரி மாணவரின் தற்கொலை பல சந்தேகங்களை காவல்துறைக்கு‌ எழுப்பியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com