ப்ளூவேல் விளையாட்டால் ரயிலில் பாய்ந்து மாணவன் தற்கொலை
ப்ளூவேல் விளையாட்டின் காரணமாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம், தமோ என்ற இடத்தில் 11ம் வகுப்பு மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். சாத்விக் பாண்டே என்ற அந்த மாணவரை சனிக்கிழமை மாலை முதல் காணவில்லை என அவரது பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து மாணவரை போலீசார் தேடி வந்தனர். அப்போது ரயில்வே டிராக்கில் மாணவர் ஒருவர் அடிபட்டு இறந்தது தெரியவந்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் ரயிலில் அடிபட்டு இறந்தது சாத்விக் பாண்டே என உறுதி செய்யப்பட்டது. ப்ளூவேல் விளையாட்டால் சாத்விக் பாண்டே ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. மத்திய பிரதேச மாநிலத்தில் ப்ளூவேல் விளையாட்டால் நிகழ்ந்த முதல் மரணம் இது. ப்ளூவேல் விளையாட்டால் இந்தியாவில் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது.