இந்தியா
ஆன்லைன் பந்தய மற்றும் சூதாட்ட தளங்களை தடை செய்யவேண்டும்: ஜெகன்மோகன் ரெட்டி
ஆன்லைன் பந்தய மற்றும் சூதாட்ட தளங்களை தடை செய்யவேண்டும்: ஜெகன்மோகன் ரெட்டி
ஆந்திராவில் 132 ஆன்லைன் சூதாட்டம், பந்தயம் மற்றும் கேமிங் தளங்களை தடைசெய்ய வேண்டும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி 132 ஆன்லைன் சூதாட்டம், பந்தயம் மற்றும் கேமிங் வலைத்தளங்கள் மற்றும் அதன் பயன்பாடுகளை பட்டியலிட்டு, அத்தகைய அனைத்து இணைய சேவை வழங்குநர்களையும் ஆந்திர மாநிலத்தில் தடைசெய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். “இத்தகைய ஆன்லைன் தளங்கள் இளைஞர்களின் சூதாட்டத்திற்கும், இளைஞர்கள் வீடுகளிலிருந்தே பந்தயம் கட்டுவதற்கும் வழிவகுத்தது" என்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.