பட்டியல் இன மக்களுக்கான விருந்தில் பாஜக கின்னஸ் சாதனை முயற்சி

பட்டியல் இன மக்களுக்கான விருந்தில் பாஜக கின்னஸ் சாதனை முயற்சி

பட்டியல் இன மக்களுக்கான விருந்தில் பாஜக கின்னஸ் சாதனை முயற்சி
Published on

டெல்லியில் அமித் ஷா பங்கேற்கும் பேரணியில் 5 ஆயிரம் கிலோ கிச்சடி தயாரிக்கப்படுகிறது. இதன்மூலம் கின்னஸ் சாதனைக்கும் பாஜக முயற்சிக்கிறது.

பாஜக அரசு பட்டியல் இன மக்களை கண்டுகொள்வதில்லை எனப் பொதுவான குற்றச்சாட்டு நிலவுகிறது. இந்நிலையில் அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பட்டியல் இன மக்களின் வாக்குகளை பெற பாஜக முயற்சி மேற்கொண்டுள்ளது. அதன்படி டெல்லி ராம் லீலா மைதானத்தில் ‘பீம் மகாசங்கம் விஜய் சங்கல்ப்’என்கிற பேரணி நடைபெறுகிறது. பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இப்பேரணிக்கு தலைமையேற்கிறார்.

இந்நிலையில் இப்பேரணியில் 5 ஆயிரம் கிலோ கிச்சடி தயாரிக்கப்படுகிறது. லட்சக்கணக்கான பட்டியல் இன மக்களின் வீடுகளில் இருந்து பெறப்பட்ட அரிசி உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு இந்தக் கிச்சடி தயாரிக்கப்படுகிறது. இதற்கான பணிகளில் பாஜகவின் பட்டியல் இன அணியான பாஜக எஸ்சி மோர்சா ஈடுபட்டிருக்கிறது. பட்டியல் இன மக்களின் வாக்குகளை குறிவைப்பது ஒருபுறம் இருந்தாலும் இதன்மூலம் கின்னஸ் சாதனை படைக்கவும் பாஜக முயற்சி செய்கிறது. தயாரிக்கப்படும் கிச்சடி பாஜக உறுப்பினர்கள், பாஜக ஆதரவாளர்கள் எனப் பேரணியில் பங்கேற்பவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

தற்போது வரை 918.8 கிலோ அளவில் தயாரிக்கப்பட்ட கிச்சடியே உலகளவில் மிகப்பெரிய கிச்சடியாக பார்க்கப்படுகிறது. பிரபல சமையல் கலைஞர் சஞ்சீவ் கபூர் இதனை கடந்த 2017-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தயாரித்திருந்தார். இந்நிலையில் இந்தச் சாதனையை முறியடித்து கின்னஸ் சாதனை படைக்கவும் பாஜக முயற்சித்துள்ளது. பாஜக செய்துள்ள பணிகள் குறித்து அமித் ஷா இப்பேரணியில் எடுத்துரைக்க உள்ளார்.

பட்டியல் இன மக்களை மோடி அரசு கண்டுகொள்வதில்லை. அவர்களின் முன்னேற்றத்திற்கு எதுவும் செய்யவில்லை என தொடர்ச்சியாக பாஜக மீது குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில் பாஜக இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com