இந்தியா
“பாஜக தொண்டர்களின் தொல்லை தாங்க முடியவில்லை” - மம்தா பேட்டி
“பாஜக தொண்டர்களின் தொல்லை தாங்க முடியவில்லை” - மம்தா பேட்டி
வாக்குப்பதிவு தொடங்கிய காலையில் இருந்தே பாஜக தொண்டர்கள் தொல்லை கொடுத்து வருவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
மக்களவைக்கு இறுதிக்கட்டமாக இன்று 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் மேற்கு வங்கத்தில் உள்ள 9 தொகுதிகளும் அடங்கும். மேற்கு வங்கத்தில் மதியம் 5 மணி வரை 64.87 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குப்பதிவு மாலை மணி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில் கொல்கத்தாவிலுள்ள வாக்குச்சாவடி ஒன்றில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது வாக்கினை பதிவு செய்தார். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “ மாநிலத்தில் காலையில் வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே பாஜக தொண்டர்கள் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் தொல்லை கொடுத்து வருகின்றனர். இதற்கு முன்பு இதுபோன்ற சம்பவத்தை பார்த்ததே இல்லை” எனக் கூறியுள்ளார்.