“புல்லட் ரயில் இருக்கட்டும்.. இந்த ரயிலை கவனியுங்கள்” - பிரதமரை விமர்சித்த பாஜக முன்னாள் அமைச்சர்

“புல்லட் ரயில் இருக்கட்டும்.. இந்த ரயிலை கவனியுங்கள்” - பிரதமரை விமர்சித்த பாஜக முன்னாள் அமைச்சர்

“புல்லட் ரயில் இருக்கட்டும்.. இந்த ரயிலை கவனியுங்கள்” - பிரதமரை விமர்சித்த பாஜக முன்னாள் அமைச்சர்
Published on

புல்லட் ரயில் எல்லாம் இருக்கட்டும் முதலில் இருக்கும் ரயில்களை சீர்படுத்துங்கள் என பாஜக மூத்த நிர்வாகி லஷ்மி கன்டா சாவ்லா
சாடியுள்ளார்.

பாஜகவின் மூத்த நிர்வாகியும், பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான ல‌ஷ்மி சாவ்லா, தனது ரயில் பயணம்
தொடர்பாக பேசி ஒரு வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் பரபரப்பாகியுள்ளது. அந்த வீடியோ தற்போது அதிகம் பேரால் பகிரப்பட்டு
வருகிறது. அதில், “நான் சென்றது சர்யு-யமுனா எக்ஸ்பிரஸ் ரயில். நான் எப்போது விமானம் கிடைத்தால் அதில் சென்றுவிடுவேன்.
ஆனால் இன்று எதிர்பாராத விதமாக இந்த ரயிலில் வந்துவிட்டேன். மூன்றாம் நிலை ஏசி கம்பார்ட்மெண்டில் பயணித்தேன். 

இங்கு இருக்கும் சிரமங்களை பொறுத்துக்கொள்ளவே முடியாது. ஏன் இந்த வண்டி தாமதமாக செல்கிறது ? என்ன பிரச்னை ? எப்போது
போய் சேரும்? எனக் கேட்கக்கூட இங்கு ஒரு ஆல் இல்லை. 200 கிலோ மீட்டர் வேகத்திற்கு செல்லக்கூடிய புல்லட் ரயிலை
விடப்போகிறோம் என்று கூறுகின்றீர்கள். ஆனால் இங்கு மக்கள் ரயில் வருகைக்காக நடைமேடை மற்றும் காத்திருப்போர் அறைகளில்
குவிந்துள்ளனர். ஒவ்வொரு முறையும் டிவி விளம்பரங்களில் ரயிலின் குறைகளை கூறுவதற்கு புகார் எண்களை தெரிவிக்கின்றீர்கள்.
ஆனால் அது எதுவே தொடர்புகொள்ள முடியவில்லை. மூத்த குடிமக்கள் ரயிலில் சென்றால் மருத்துவர் உதவிக்கு வருவார் என பல
அறிவிப்புகளை சொன்னீர்கள். ஆனால் இங்கு யாருமே வரவில்லை. 

இதில் பயணிக்கும் மக்கள் பாதுகாப்பாக உணரவில்லை. இந்த ரயில்களில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. குழந்தைகளுக்கு
ரயிலிலோ அல்லது ரயில் நிலையங்களிலோ பால் இல்லை. தண்ணீர் மற்றும் உணவு வாங்குவதற்கு இங்கு வழியே இல்லை.
கழிவறைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இருக்கைகள் உடைந்து போயுள்ளன. மக்கள் புகார் தெரிவிக்கும் எண்களான
138, 139 என்ற எந்த எண்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. 

பியூஷ்  கோயல் மெயில் ஐடிக்கு புகார்களை அனுப்பினால் அது செல்லவில்லை. இந்த நிலையை பார்க்கும் போது, ‘நம்பிக்கையற்ற
ராஜா இருண்ட தேசத்தை ஆண்டார்’ என்ற இந்தி பழமொழிதான் நினைவிற்கு வருகிறது. டிக்கெட் இல்லாத பயணிகளுக்கு டிக்கெட்
பரிசோதனையாளர் இருக்கைகளை விற்கிறார். ரயில்வேதுறை அமைச்சர் ஒருமுறை சாதாரண பயணிகள் செல்லும் ரயிலில் பயணித்து
பாருங்கள். அப்போது புரியும் அவர்களது சிரமம்” என்று காட்டமாக தெரிவித்துள்ளார். அவர் சென்ற ரயில் 9 மணி நேரம் தாமதமாக
சென்றது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com