\
கோவாவில் ஆட்சியைத் தக்கவைத்த பாஜக

கோவாவில் ஆட்சியைத் தக்கவைத்த பாஜக

கோவாவில் ஆட்சியைத் தக்கவைத்த பாஜக
Published on

கோவாவில் சிறிய கட்சிகளின் ஆதரவுடன் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கிறது.

மகாராஷ்ட்ர கோமன்டக் கட்சி, கோவா மக்கள் முன்னணி மற்றும் 3 சுயேச்சைகள் ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து கோவாவில் ஆட்சியைத் தக்க வைக்கும் பாஜகவின் முயற்சி வெற்றி பெற்றுள்ளது. பாஜக மற்றும் ஆதரவு தரும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் கோவா ஆளுநரைச் சந்தித்த மனோகர் பாரிக்கர், ஆட்சியமைக்க உரிமை கோரினார். கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 13 இடங்களையும், மகாராஷ்ட்ர கோமன்டக் கட்சி 3 இடங்களையும், கோவா மக்கள் முன்னணி 3 இடங்களையும் பெற்றுள்ளன. இவை தவிர சுயேச்சைகள் மூன்று பேர் ஆதரவு தெரிவித்ததை அடுத்து பாரதிய ஜனதாவிற்கு 22 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com