2024 தேர்தல் வியூகம்: 2 நாட்கள் நடைபெறும் பாஜகவின் முக்கிய உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம்

2024 தேர்தல் வியூகம்: 2 நாட்கள் நடைபெறும் பாஜகவின் முக்கிய உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம்
2024 தேர்தல் வியூகம்: 2 நாட்கள் நடைபெறும் பாஜகவின் முக்கிய உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மே 20, 21-ம் தேதிகளில் பா.ஜ. கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல் வெற்றி குறித்த வியூகம் வகுப்பதுடன், கட்சி அமைப்புகளில் செய்ய வேண்டிய மாற்றங்கள் தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளிடம் பேசுவார் எனத் தெரிகிறது.

2024-ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ளபோதிலும், தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றி மோடியை பிரதமர் பதவியில் அமர்த்த வேண்டும் என்ற இலக்குடன் பா.ஜ.க. பணியாற்றி வருகிறது. அதுபோல அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தொடர்ந்து தோல்வி கண்ட காங்கிரஸ் வரும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என தீவிரமாக பணியாற்றி வருகிறது.

இதற்காக பிரசாந்த் கிஷோர் வழங்கிய ஆலோசனைகள் குறித்து ஆய்வு செய்ய உயர்மட்ட குழுவை கட்சித்தலைவர் சோனியா காந்தி அமைத்துள்ளார். அதற்கு முன்னதாக குஜராத், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியிருக்கின்றன. இந்தநிலையில் மே 20, 21-ம் தேதிகளில் பாஜகவின் உயர்மட்டக் கூட்டம் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் பா.ஜ.க. 2024-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக கட்சி அமைப்புகளை பலப்படுத்துவது தொடர்பாக விரிவாக விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமை தாங்கும் இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் உள்ள கட்சியின் மாநில தலைவர்கள், மாநில பொறுப்பாளர்கள், இணைப்பொறுப்பாளர்கள் மற்றும் பொதுச்செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.கட்சி அமைப்புகளில் செய்ய வேண்டிய மாற்றம், தேர்தலுக்கு ஏற்ப நிர்வாக அமைப்புகளில் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com