பிஹார் தேர்தல்| முடிவுக்கு வந்த NDA கூட்டணி உடன்பாடு.. 101 இடங்களில் போட்டியிடும் பாஜக!
பிஹார் தேர்தலில் பாஜக 101 இடங்களில் போட்டியிட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளிடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து பிஹார் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் தலா 101 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி 29 தொகுதிகளில் போட்டியிடும் என்றும், ராஷ்டிரிய லோக் மோர்ச்சா கட்சி மற்றும் ஜித்தன் ராம் மஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி தலா 6 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் கூறியுள்ளார்.
பிஹாரில் முதல் கட்டத்தேர்தல் நவம்பர் 6ஆம் தேதியும், இரண்டாம் கட்டத்தேர்தல் நவம்பர் 11ஆம் தேதியும் நடைபெற உள்ளது.