"சிவசேனா எம்எல்ஏக்களை பாஜக மிரட்டிப் பார்க்கிறது"- சஞ்சய் ராவத்

"சிவசேனா எம்எல்ஏக்களை பாஜக மிரட்டிப் பார்க்கிறது"- சஞ்சய் ராவத்
"சிவசேனா எம்எல்ஏக்களை பாஜக மிரட்டிப் பார்க்கிறது"- சஞ்சய் ராவத்

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமையும் என மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களை பாரதிய ஜனதா மிரட்டிப் பார்ப்பதாக சிவசேனா குற்றஞ்சாட்டியுள்ளது.

அண்மையில் முடிந்த மகாராஷ்டிராவின் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆட்சி அமைக்க இந்த கூட்டணி பெரும்பான்மையை பெற்றிருந்தாலும் அவர்களில் முதலமைச்சர் யார் என்பதில் இழுபறி இன்னும் நீடிக்கிறது. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் எந்த ஆட்சியும் அமையாவிட்டால் வரும் ஏழாம் தேதி முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைய உள்ளது என அம்மாநில நிதித்துறை அமைச்சர் சுதிர் முன்கந்திவார் தனியார் தொலைக்காட்சியின் பேட்டியில் தெரிவித்திருந்தார். 

இதில் கடும் அதிருப்தி அடைந்துள்ள சிவசேனா, தனது கட்சிப் பத்திரிகையான சாம்னாவில் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களை பாஜக மிரட்டிப் பார்ப்பதாக சாம்னா பத்திரிகையின் நிர்வாக ஆசிரியரும் சிவசேனாவின் செய்தி தொடர்பாளருமான சஞ்சய் ராவத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com