மக்களவைத் தேர்தலுக்காக பாஜக செலவு செய்தது இத்தனை கோடிகளா?
மக்களவைத் தேர்தலுக்காக பாரதிய ஜனதா கட்சி ஆயிரத்து 700 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செலவின அறிக்கையில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
அதன்படி, 2024ஆம் ஆண்டில் நடந்த 18ஆவது மக்களவைத் தேர்தலுக்காக பாஜக 1,737 கோடியே 68 லட்சம் ரூபாயை செலவு செய்துள்ளது. அதில் தேர்தல் பரப்புரைக்காக 884 கோடியே 45 லட்சமும், வேட்பாளர்கள் சார்ந்த செலவாக 853 கோடியே 23 லட்சமும் பாஜக செலவிட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் விளம்பரங்களுக்காக 611 கோடியே 50 லட்சமும், சுவரொட்டிகள், பதாகைகள் சார்ந்த செயல்பாடுகளுக்கு 55 கோடியே 75 லட்சமும் செலவிடப்பட்டுள்ளாது.
பொதுக் கூட்டங்களுக்கு 19 கோடியே 84 லட்சமும், நட்சத்திர பேச்சாளர்களின் போக்குவரத்து செலவுக்கு 168 கோடியே 92 லட்சமும், பிற தலைவர்களின் சுற்றுப்பயணங்களுக்கு 2 கோடியே 53 லட்சம் ரூபாயும் பாஜக செலவிட்டுள்ளது.