டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
தில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி. இவர் சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் தில்லியின் வடகிழக்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் அவர் தனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக போலீசில் புகார் தெரித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, ‘எனது மொபைல் போனுக்கு மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து வந்துள்ள அந்த மெசேஜில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பலத்த கட்டாயத்தின் பேரிலேயே, உங்கள் கதையை முடிக்க போகிறேன். இதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபற்றி போலீசிடம் தெரிவித்துள்ளேன். முறையான புகாரை அளிக்க இருக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார். ’தேவைப்பட்டால் பிரதமரையும் இல்லாமல் செய்வோம்’ என்று இந்தியில் அனுப்பப்பட்டுள்ள அந்த மெசேஜில் கூறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.