'பாஜக அனைத்து மதங்களையும் மதிக்கிறது; ஆனால்...' - அருண் சிங்

'பாஜக அனைத்து மதங்களையும் மதிக்கிறது; ஆனால்...' - அருண் சிங்

'பாஜக அனைத்து மதங்களையும் மதிக்கிறது; ஆனால்...' - அருண் சிங்
Published on

"பாரதிய ஜனதா கட்சி அனைத்து மதங்களையும் மதிப்பதாகவும், எந்த மதத்தினரையும் இழிவுப்படுத்துவதை பா.ஜ.க.விரும்பவில்லை'' என பொதுச்செயலாளர் அருண் சிங் கூறியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:- பாரதிய ஜனதா கட்சி அனைத்து மதங்களையும் மதிக்கிறது. எந்த மதத்தினரையும் இழிவுப்படுத்துவதை பாரதிய ஜனதா கட்சி கடுமையாக கண்டிக்கிறது. அதே போல் பாரதிய ஜனதா கட்சி எந்த ஒரு பிரிவினரையோ அல்லது மதத்தையோ அவமதிக்கும் அல்லது இழிவுப்படுத்தும் சித்தாந்தத்திற்கு கடுமையாக எதிராக உள்ளது. அப்படிப்பட்டவர்களை பாரதிய ஜனதா கட்சி முன்நிறுத்துவது இல்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும், அவரவர் விருப்பப்படி எந்த மதத்தையும் பின்பற்றவும், ஒவ்வொரு மதத்தையும் மதிக்கவும் உரிமை அளிக்கிறது.

சுதந்திரம் அடைந்து இந்தியா தனது 75-வது ஆண்டை கொண்டாடும் இந்த வேளையில் அனைவரும் சமம். வளர்ச்சி மற்றும் வளர்ச்சியின் பலன்களை அனைவரும் அனுபவிக்கும் ஒரு சிறந்த நாடாக இந்தியாவை மாற்ற நாங்கள் உறுதி பூண்டுள்ளோம் என கூறப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக முகமது நபிக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியின் நுபுர் சர்மா சர்ச்சை கருத்து தெரிவித்ததாக புகார் எழுந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை இன்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நுபுர் சர்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.  நாட்டின் அண்மைகாலமாக மதத்தின் பெயரில் பா.ஜ.க. வன்முறையில் ஈடுபடுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாம்: பாஜகவில் இணைகிறாரா மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் நக்மா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com