இந்தியா
பஞ்சாப் தேர்தல்: முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக
பஞ்சாப் தேர்தல்: முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக
பஞ்சாப் தேர்தலில் போட்டியிடும் 34 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
நடைபெறவிருக்கும் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் பாஜக, பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் மற்றும் சன்யுக் சிரோன்மணி அகாலிதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்தக் கூட்டணியில் பாஜக 65 தொகுதிகளிலும், பஞ்சாப் லோக் காங்கிரஸ் 38 இடங்களிலும், சன்யுக் அகாலிதளம் 14 இடங்களிலும் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பஞ்சாப் தேர்தலில் போட்டியிடும் 34 வேட்பாளர்கள் அடங்கிய முதல் வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
பஞ்சாப்பில் பிப்ரவரி 20-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படவுள்ளது. மார்ச் 10 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.

