கர்நாடகா| சீட் தராத பாஜக.. சுயேட்சையாக களமிறங்கிய ஈஸ்வரப்பா!

பாஜக தலைமை சீட் வழங்காததால், அக்கட்சியின் மூத்த தலைவரும் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வருமான ஈஸ்வரப்பா, சுயேட்சையாக போட்டியிடுகிறார்.
K S Eshwarappa
K S Eshwarappaani

கர்நாடகாவில் உள்ள மொத்தமுள்ள 28 மக்களவைத் தொகுதிகளுக்கு 2 கட்டங்களாகத் (ஏப்.26 மற்றும் மே 7) தேர்தல் நடைபெற உள்ளது. அந்த வகையில், பாஜகவும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. இதில், மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு சிக்கபள்ளாப்பூர், மாண்டியா, ஹாசன் என 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மற்ற தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் சிலருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதற்கும் ஒருசிலருக்கு வாய்ப்பு வழங்கப்படாததாலும் அங்கு உட்கட்சி பூசல் நிலவுகிறது.

குறிப்பாக, கர்நாடக முன்னாள் துணை முதல்வர் கே.எஸ்.ஈஸ்வரப்பா, தனது மகன் கே.இ.காந்தேஷ் ஷிவமோகா தொகுதியில் போட்டியிட பாஜக தலைமையிடம் கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், அந்தத் தொகுதியில் முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவின் மகன் பி.ஒய்.ராகவேந்திரா களமிறக்கப்பட்டு உள்ளார். இதனால் அதிருப்திக்கு ஆளான ஈஸ்வரப்பா, இதற்கு முக்கியக் காரணம் எடியூரப்பாதான் எனவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதுகுறித்து அப்போது அவர், ”இந்தப் போராட்டம் எடியூரப்பாவுக்கும் எனக்குமானது; தவிர, என் மகனுக்குச் சீட் கிடைக்காமல் இருக்க காரணமாக இருந்தவர் எடியூரப்பாதான்” எனத் தெரிவித்ததுடன், பாஜகவை எதிர்த்து களமிறங்க முடிவு செய்திருப்பதாகவும் கூறியிருந்தார்.

இதையும் படிக்க: மனைவியைப் பழிவாங்க 1 வயது குழந்தைக்கு பாதரச ஊசியைச் செலுத்திய தந்தை.. ஜெர்மனியில் அரங்கேறிய கொடூரம்!

K S Eshwarappa
சீட் பிரச்னையால் பூதாகரமாகும் உட்கட்சி பூசல்; கர்நாடக பாஜகவில் வெடிக்கும் போராட்டம்.. நடப்பது என்ன?

இந்த நிலையில் ஈஸ்வரப்பா நேற்று (ஏப்ரல் 12) ஷிமோகாவில் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் அவர், “இந்த தொகுதியில் பாஜக, காங்கிரஸை தோற்கடிப்பேன். எனக்கு எதிராகச் செயல்படும் எடியூரப்பாவுக்கும் பாஜக தலைவர்களுக்கும் தக்கப் பாடம் கற்பிப்பேன். எடியூரப்பா குடும்பத்திடம் இருந்து பாஜகவை விடுவிப்பதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.

எடியூரப்பா மற்றும் அவரது மகன் பி.ஒய்.ராகவேந்திராவின் கோட்டையாக ஷிமோகா விளங்கிவருகிறது. கடந்த 2009 முதல் அவர்கள் வெற்றிபெற்று வருகின்றனர். அதேநேரத்தில், இதே தொகுதியில் குருபா இனத்தைச் சேர்ந்த ஈஸ்வரப்பா 5 முறை வெற்றி பெற்றுள்ளார். இதே தொகுதியில் தற்போது காங்கிரஸ், கீதா சிவராஜ்குமாரைக் களமிறக்கியுள்ளது. இவர் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமாரின் மனைவியும், மறைந்த முன்னாள் முதல்வர் பங்காரப்பாவின் மகளும் ஆவார். இதற்கிடையே ஈஸ்வரப்பா இந்த தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடுவதால், கடுமையான போட்டி இருப்பதுடன், பாஜகவுக்கான வாக்குச் சதவிகிதமும் குறையும் எனச் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்க: இந்தியாவின் முதல் விண்வெளி சுற்றுலாப் பயணி.. யார் இந்த கோபிசந்த் தொட்டகுரா?

K S Eshwarappa
மாண்டியாவில் களமிறக்கப்பட்ட குமாரசாமி; பாஜக கைவிட்டதால் கடும் அதிருப்தியில் சுயேட்சை எம்.பி சுமலதா!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com