பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா சென்னை வருகை! நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு

பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா சென்னை வருகை! நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு
பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா சென்னை வருகை! நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு

பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜெ.பி. நட்டா சென்னைக்கு வருகை தந்துள்ளார். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாகவும், துக்ளக் விழாவில் பங்கேற்பதற்காகவும் அவர் தமிழகத்திற்கு வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

பாஜக மேற்கு சென்னை பகுதி நிர்வாகிகளால் நடத்தப்படும் ‘நம்ம ஊரு பொங்கல்’ நிகழ்வில் நட்டா பங்கேற்ற பின்னர் துக்ளக் இதழின் 51வது ஆண்டு கொண்டாட்ட விழாவிலும் பங்கேற்கிறார். 

முன்னதாக தமிழகம் வந்திருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளித்தார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கணக்குகளை போட்டு தேசிய கட்சி தலைவர்கள் தமிழகம் வந்து செல்வதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com