\
தூக்கில் சடலமாக மீட்கப்பட்ட பாஜக பிரமுகர் -  அரசியல் கொலை?

தூக்கில் சடலமாக மீட்கப்பட்ட பாஜக பிரமுகர் - அரசியல் கொலை?

தூக்கில் சடலமாக மீட்கப்பட்ட பாஜக பிரமுகர் - அரசியல் கொலை?
Published on

மேற்குவங்கத்தில் பாரதிய ஜனதா பிரமுகர் ஒருவரின் சடலம் தூக்கிலிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. 

மேற்குவங்கத்தின் புருலியா மாவட்டத்தில் உள்ள மின்மாற்றி கோபுரத்தில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டது. அவர் தவா என்ற கிராமத்தை சேர்ந்த துலால் குமார் என்பது தெரியவந்தது. ஏற்கனவே பல்ராம்பூர் கிராமத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா பிரமுகர் திரிலோச்சன் மகாஜன் என்பவரின் சடலம் மரத்தில் இருந்து மீட்கப்பட்டிருந்தது. இந்த இரண்டு கொலைகளும் அரசியல் காரணங்களுக்காக நடந்தவை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மத்தியமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com