\
பாஜக செயற்குழு கூட்டம் இன்று தொடக்கம்

பாஜக செயற்குழு கூட்டம் இன்று தொடக்கம்

பாஜக செயற்குழு கூட்டம் இன்று தொடக்கம்
Published on

பாரதிய ஜனதா கட்சியின் இரண்டு நாள் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று தொடங்குகிறது.

இதில், ரூபாய் நோட்டு விவகாரம் மற்றும் உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தலை எதிர்கொள்வது குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. மாநாட்டினை, கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தொடங்கி வைக்கிறார். நிறைவு நாளான நாளை பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார். செயற்குழு கூட்டம் நடைபெறுவதையொட்டி, டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com