டெல்லியில் இன்று பாஜக செயற்குழு கூட்டம் - இடைத்தேர்தலில் பின்னடைவு குறித்து விவாதம்? 

டெல்லியில் இன்று பாஜக செயற்குழு கூட்டம் - இடைத்தேர்தலில் பின்னடைவு குறித்து விவாதம்? 

டெல்லியில் இன்று பாஜக செயற்குழு கூட்டம் - இடைத்தேர்தலில் பின்னடைவு குறித்து விவாதம்? 
Published on
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது.
பாரதிய ஜனதா தேசியத் தலைவர் ஜேபி நட்டா தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பாஜக முதலமைச்சர்கள், தேசிய செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தின் இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றுகிறார். அண்மையில் 14 மாநிலங்களில் நடைபெற்ற 29 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் பாரதிய ஜனதா பின்னடைவை சந்தித்தது. குறிப்பாக அக்கட்சி ஆளும் இமாச்சலப் பிரதேசம், கர்நாடகாவில் தோல்வி ஏற்பட்டது கவனத்தை ஈர்த்துள்ளது. அது குறித்து செயற்குழுவில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
மேலும் அடுத்தாண்டு உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான வியூகங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com