ட்ரம்ப்பின் தடை உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்த பாஜக எம்பி

ட்ரம்ப்பின் தடை உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்த பாஜக எம்பி

ட்ரம்ப்பின் தடை உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்த பாஜக எம்பி
Published on

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் குடியேற்ற தடை உத்தரவுக்கு ஆதரவாக பாஜ எம்பி யோகி ஆதித்யா நாத் கருத்துத் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் தொகுதி எம்பியாக யோகி ஆதித்யாநாத், புலந்த்சஹார் பகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்ட்தில் பேசும்போது, ட்ரம்ப்பின் குடியேற்ற தடை போன்றதொரு தடை இந்தியாவுக்கும் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். சிரியா, லிபியா உள்ளிட்ட இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் வர 90 நாட்களுக்குத் தடை விதிப்பதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டார். ட்ரம்ப்பின் இந்த தடை உத்தரவுக்கு எதிராக அமெரிக்கா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com