\
மக்களவை இடைக்கால சபாநாயகர் பதவியேற்பு

மக்களவை இடைக்கால சபாநாயகர் பதவியேற்பு

மக்களவை இடைக்கால சபாநாயகர் பதவியேற்பு
Published on: 

மக்களவை இடைக்கால சபாநாயகராகா வீரேந்திரகுமார் இன்று பதவியேற்றார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இந்த ஆட்சியின் முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இதன் இடைக்கால சபாநாயகராக மத்திய பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்.பி வீரேந்திரகுமார் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த பதவிபிரமாணம் செய்து வைத்தார். 

இவர் இன்று பதவியேற்கும் புதிய எம்.பி.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார். இதைத் தொடர்ந்து 19ஆம் தேதி புதிய சபாநாயகர் தேர்வு நடைபெறுகிறது. வரும் 20ஆம் தேதி நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்துகிறார்.

இதனையடுத்து கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில், காலாவதியான 46 சட்ட மசோதாக்கள் மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளன. காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிப்பது, முத்தலாக் தடை உள்பட முக்கியமான மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என எதிபார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஜூலை 5ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்‌. இன்று தொடங்கும், 17 ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் ஜூலை மாதம் 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது‌.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com