\
தலைகீழாக கவிழ்ந்தது கார்: பாஜக எம்.பி படுகாயம்!

தலைகீழாக கவிழ்ந்தது கார்: பாஜக எம்.பி படுகாயம்!

தலைகீழாக கவிழ்ந்தது கார்: பாஜக எம்.பி படுகாயம்!
Published on

பாஜக எம்.பி சென்ற கார் விபத்துக்குள்ளானதில், அவர் படுகாயமடைந்தார்.

உத்தரகாண்ட் மாநிலம் கர்வால் தொகுதி பாஜக எம்.பி, திரத் சிங் ராவத். இவர் தனது காரில் இன்று காலை நிகழ்ச்சி ஒன்றுக்காகச் சென்று கொண்டிருந்தார். கார் பிம்கோடா- பன்ட் டீப் சாலையில் சென்றுகொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் கார் தலைகீழாக கவிழ்ந்தது.

இதில் காருக்குள் இருந்த எம்.பி, திரத் சிங் ராவத் படுகாயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து விபத்தில் சிக்கிய ராவத்தை மீட்டனர்.

பின்னர் ஹரித்வார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  அவர் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com