பாஜக எம்.பி. ராம் ஸ்வரூப் சர்மா டெல்லி வீட்டில் மரணம் - தற்கொலையா என விசாரணை

பாஜக எம்.பி. ராம் ஸ்வரூப் சர்மா டெல்லி வீட்டில் மரணம் - தற்கொலையா என விசாரணை
பாஜக எம்.பி. ராம் ஸ்வரூப் சர்மா டெல்லி வீட்டில் மரணம் - தற்கொலையா என விசாரணை

இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி., ராம் ஸ்வரூப் சர்மா, டெல்லியில் உள்ள அவரது வீட்டில் இன்று இறந்து கிடந்தார். இது தற்கொலையா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.  

ராம் ஸ்வரூப் சர்மா, அவரது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக டெல்லி காவல்துறை செய்தி தொடர்பு அதிகாரி சின்மாய் பிஸ்வால் தெரிவித்தார். உடலை கைப்பற்றிய பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

சம்பவ இடத்திலிருந்து தற்கொலை குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை. சர்மாவின் தனி உதவியாளர் காலை 7.45 மணியளவில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு எச்சரிக்கை விடுத்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது தற்கொலைதானா என்பது பற்றிய விசாரணை நடந்து வருகிறது, பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது மரணத்திற்கான சரியான காரணம் கண்டறியப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

கடந்த சில மாதங்களாக நாடாளுமன்ற உறுப்பினர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. சர்மாவுக்கு இரங்கல் தெரிவித்த பின்னர் மக்களவையில் நடவடிக்கைகள் பிற்பகல் 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. அவர் இறந்த செய்தியைத் தொடர்ந்து பாஜக தனது நாடாளுமன்றக் கட்சி கூட்டத்தை இன்று ரத்து செய்தது. சர்மா 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் மண்டி நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து மக்களவையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு மாதத்திற்குள் மரணமடைந்த இரண்டாவது எம்.பி இவர் ஆவார். கடந்த பிப்ரவரியில், தாத்ரா மற்றும் நகர் ஹவேலியைச் சேர்ந்த  பாராளுமன்ற உறுப்பினர் மோகன் டெல்கர் மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் இறந்து கிடந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com