என் பதிவை நீக்குமாறு தேசிய தலைவர் நட்டா சொன்னார்... கங்கனாவின் X தளப்பதிவு!
அடுத்த மாதம் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான ஐஃபோன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவையாக இருக்கும் என்று இந்த மாதத் தொடக்கத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் கூறியிருந்தார்.
இது குறித்து நேற்றைய தினம் கத்தாரில் நடந்த நிகழ்வில் தெரிவித்திருந்த டிம் குக்கிடம் தெரிவித்த டிரம்ப், இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் அதன் உற்பத்தியை அதிகரிக்க கூடாது. அதில் தனக்கு விருப்பமில்லை என்று கூறியிருந்தார் .
அமெரிக்க அதிபரின் இப்பேச்சால் கோபமடைந்த பாஜக எம்பி கங்கனா இதுகுறித்தான ஒரு பதிவை தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
அதில் , “இதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? அவர் அமெரிக்க அதிபர். ஆனால் உலக அளவில் அதிகம் விரும்பப்படும் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். ட்ரம்ப் இரண்டாவது முறையாக அதிபர் ஆகியுள்ளார். ஆனால், மூன்றாவது முறையாக பிரதமர் மோடி ஆட்சி அமைத்துள்ளார். ட்ரம்ப் ஆல்பா மேல் ஆக இருக்கலாம். ஆனால், நமது பிரதமர் ஆல்பா மேல்-களின் தந்தை. இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது தனிப்பட்ட ரீதியிலான பொறாமையா அல்லது அரசாங்க ரீதியான பாதுகாப்பின்மையா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்” என்று பதிவிட்டிருந்தார்,
ஆனால் , அந்த பதிவை தனது சமூக வலைதளப்பக்கத்திலிருந்து டெலிட் செய்துள்ள கங்கா.. ஏன் அப்பதிவு நீக்கப்பட்டது என்பது குறித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில், “இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் அதிகளவில் உற்பத்தியில் ஈடுபட வேண்டாம் என டிம் குக் வசம் ட்ரம்ப் சொன்னது தொடர்பாக நான் பதிவு செய்த ட்வீட்டை நீக்குமாறு தேசியத் தலைவர் நட்டா, என்னை தொடர்பு கொண்டார். அந்தப் பதிவு என்னுடைய தனிப்பட்ட கருத்து என தெரிவித்துக் கொள்கிறேன். அந்தப் பதிவு இன்ஸ்டாவில் இருந்து நீக்கி விட்டேன்” என கங்கனா தனது எக்ஸ் பதிவில் கூறியுள்ளார்.
தனது பதிவை தேசியத் தலைவர் நட்டாதான் நீக்க சொன்னார் என்றும், அவர் சொன்னதுபோலே தான் செய்துவிட்டதாகவும் கங்கனா தெரிவித்திருப்பது பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.