\
சுதந்திர தின விழா: லடாக் எம்.பி நடனமாடி உற்சாகம்- வீடியோ

சுதந்திர தின விழா: லடாக் எம்.பி நடனமாடி உற்சாகம்- வீடியோ

சுதந்திர தின விழா: லடாக் எம்.பி நடனமாடி உற்சாகம்- வீடியோ
Published on

சுதந்திர தினவிழாவை, லடாக் மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி ஜம்யங் செரிங் நம்ஜியால் நண்பர்களுடன் நடனமாடி, கொண்டாடினார்.

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அம்மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசமாக அறிவித்தது. அப்போது மக்களவையில், லடாக் தொகுதி பா.ஜ.க எம்.பி ஜம்யாங் செரிக் நம்ஜியால் பேசிய உரை, ஒரே நாளில் அவரை புகழ்பெற வைத்தது.  

இந்நிலையில் 73 வது சுதந்திர தின விழா, நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் முப்படைகளின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி, காலை 7.30 மணிக்கு கொடியேற்றி நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.

இதற்கிடையே லடாக் தொகுதி எம்.பி, தனது நண்பர்களுடன் பாரிம்பரிய நடனத்துடன் சுதந்திர தினத்தை இன்று கொண் டாடினார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com