குஜராத் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பதவி ஏற்பது யார் என்பது இன்று மாலை தெரியவரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
குஜராத் மாநிலத்தில் அண்மையில் சட்டப்பேரவை தேர்தல் நடைப்பெற்றது. இதில் பாஜக 99 இடங்களில் வென்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. இதனையடுத்து குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி, ஆளுநர் ஓ.பி.கோஹ்லியிடம் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார். அதேபோல துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களும் தங்களின் ராஜினாமாவை வழங்கினர். இதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர், புதிய அரசு அமையும் வரையில் காப்பந்து அரசாக நீடிக்கும்படி கேட்டுக் கொண்டார். இந்நிலையில் புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான கூட்டம் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த முறையும் விஜய் ரூபானியே முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவார் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.