\
“பிரசாந்த் கிஷோர் யார்?” - பாஜக அமைச்சர் கேள்வி

“பிரசாந்த் கிஷோர் யார்?” - பாஜக அமைச்சர் கேள்வி

“பிரசாந்த் கிஷோர் யார்?” - பாஜக அமைச்சர் கேள்வி
Published on

பிரசாந்த் கிஷோர் யார் என மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரி கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய அமைச்சரும் டெல்லி தேர்தலுக்கான பாஜகவின் இணை பொறுப்பாளருமான ஹர்தீப் பூரி டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பிரசாந்த் கிஷோர் யார்?” என கேள்வி எழுப்பினார். மேலும் தனக்கு கிஷோரை தனிப்பட்ட முறையில் தெரியாது எனவும் தெரிவித்தார்.

அப்போது 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தேர்தலில் மோடிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தவர் பிரசாந்த் கிஷோர் என மத்திய அமைச்சரிடம் தெரிவித்தனர். அதற்குப் பதிலளித்த அமைச்சர் ‘அப்போது நான் அங்கு இல்லை. நான் தெரிந்து கொள்ள வேண்டும், ஆனால் எனக்கு அவரைத் தெரியாது’ எனத் தெரிவித்தார்.

இதற்குப் பதில் அளித்த அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் “அவர் ஒரு மூத்த அமைச்சர். என்னை ஏன் அவர் தெரிந்து வைத்திருக்க வேண்டும். டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் என்னைப்போன்ற சாதாரண மனிதர்கள் நிறைய பேர் வாழ்கின்றனர். அமைச்சர் பூரிக்கு இவ்வளவு பேரை எப்படி தெரியும். மத்திய அமைச்சருக்கு என்னைத் தெரிய வாய்ப்பில்லை” எனத் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com