\
பிரதமர் பாதுகாப்பு விவகாரம்: கன்னியாகுமரியில் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்

பிரதமர் பாதுகாப்பு விவகாரம்: கன்னியாகுமரியில் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்

பிரதமர் பாதுகாப்பு விவகாரம்: கன்னியாகுமரியில் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்
Published on

பஞ்சாபில் பிரதமர் மோடி தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் பாஜகவினர் மெழுகுவர்த்தி ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பஞ்சாபில் பொதுக்கூட்டத்திற்கு சென்ற பிரதமர் மோடி, தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில் பிரதமர் மோடியின் பாதுகாப்பில் அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளதாகவும், இதற்கு காரணமான பஞ்சாப் காங்கிரஸ் அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர், இதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர்.

போலீசார் அனுமதி மறுத்த நிலையில் சாலையோரம் நின்று மெழுகுவர்த்தி ஏந்தி நூதன போராட்ட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com