ராஜஸ்தான் மாநிலத்தில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ., சிசிக்சை பலன்றி உயிரிழந்தார்.
ராஜஸ்தான் மாநிலம் மண்டல்கர் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர், கீர்த்தி குமாரி. வயது 50. பன்றி காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
12 மருத்துவர்கள் கொண்ட குழு அவருக்கு சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவு செய்தியை கேள்வியுற்று மருத்துவமனை வளாகத்தில் அவரது ஆதரவாளர்கள் திரண்டனர். அவரது மறைவுக்கு மாநில முதலமைச்சர் வசுந்தரா ராஜே இரங்கல் தெரிவித்துள்ளார்.
பன்றி காய்ச்சல் நோய் பாதிப்பால் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் உயிரிழந்திருப்பது ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.