“பாஜக கூட்டணி 264 இடங்களை பிடிக்கும்” - சிவோட்டர் கருத்துக்கணிப்பு

“பாஜக கூட்டணி 264 இடங்களை பிடிக்கும்” - சிவோட்டர் கருத்துக்கணிப்பு
“பாஜக கூட்டணி 264 இடங்களை பிடிக்கும்” - சிவோட்டர் கருத்துக்கணிப்பு

2019 மக்களவை தேர்தலில் பாஜகக் கூட்டணி 264 இடங்களை பிடிக்கும் என  ஏபிபி சி-வோட்டர் கருத்துகனிப்பை தெரிவித்துள்ளது.

17வது மக்களவை தேர்தல் தொடர்பான அறிவிப்புகளை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். இந்தத் தேர்தல் ஏப்ரல் 11ல் தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இறுதியாக 7ம் கட்ட தேர்தல் மே 19ம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதி நடைபெறுகிறது. 

தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையில், ஏபிபி சி-வோட்டர் மக்களவை தேர்தலுக்கான கருத்துகணிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் மக்களவை தேர்தலில் மொத்தம் உள்ள 543 இடங்களில் பாஜகக் கூட்டணி 264 இடங்களும், காங்கிரஸ் கூட்டணி 141 இடங்களும், மற்றவர்கள் 138 இடங்களும் வெல்ல வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. 

உத்திரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் மாயாவதி-அகிலேஷ் கூட்டணிக்கு 47, பாஜக கூட்டணிக்கு 29 , காங்கிரஸ் கட்சிக்கு 4 இடங்கள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல பீகாரிலுள்ள 40 தொகுதிகளில் பாஜக கூட்டணிக்கு 36, காங்கிரஸ் கூட்டணிக்கு 4 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் மகாராஷ்டிராவில் 35 இடங்களை பாஜக கூட்டணியும், 13 இடங்களை காங்கிரஸ் கூட்டணியும் வெல்ல வாய்ப்புள்ளதாக அந்த கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

மேற்கு வங்காளத்தில் 8 இடங்களை பாஜக கூட்டணியும் 34 இடங்களை திரிணாமுல் காங்கிரசும் பிடிக்க வாய்ப்புள்ளது. ஒடிசாவில் 12 இடங்களை பாஜக கூட்டணியும், 9 இடங்களை பிஜூ ஜனதா தளம் கட்சியும் வெல்லும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்டில் 3 இடங்களை பாஜக கூட்டணியும், 10 இடங்களை காங்கிரஸ் கூட்டணியும் ஒரு இடத்தை ஜேவிஎம் கட்சியும் வெல்ல வாய்ப்புள்ளது. சத்தீஸ்கரில் 6 இடங்களை பாஜக கூட்டணியும், 5 இடங்களை காங்கிரஸ் கூட்டணியும் பிடிக்கும் எனக் கூறியுள்ளது.

ராஜஸ்தானிலுள்ள 20 இடங்களை பாஜக கூட்டணியும், 5 இடங்களை காங்கிரஸ் கூட்டணியும் வெல்ல வாய்ப்புள்ளது. டெல்லியில் 7 இடங்களையும் பாஜக கூட்டணி வெல்ல வாய்ப்புள்ளது. பாஞ்சாபில் 12 இடங்களை காங்கிரஸ் கூட்டணியும், ஒரு இடத்தை பாஜக கூட்டணியும் பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஹரியானாவில் 7 இடங்களை பாஜக கூட்டணியும் 3 இடங்களை காங்கிரஸ் கூட்டணியும் வெல்லும் எனக் கருத்துகணிப்பு கூறுகிறது. உத்தரகண்ட் மற்றும் ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்திலுள்ள அனைத்து தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் என இந்தக் கருத்துகணிப்பில் மூலம் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com