உத்தரபிரதேசத்தில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. அதிக இடங்களை அந்தக் கட்சி பிடிக்கும் என்பதால் பாஜகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி கட்சி ஆட்சி செய்து வந்தது. அந்தக் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தது. மொத்தமுள்ள 403 தொகுதியில் அந்தக் கட்சியை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக, அதிக இடங்களைப் பிடிக்கும் என கருத்துக்கணிப்புகள் வெளியாயின.
அதன்படி இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதுமே, பாஜக முன்னிலை வகிக்கத் தொடங்கியது. ஏராளமான தொகுதிகளில் அந்தக் கட்சி முன்னிலை வகிப்பதால் பாஜக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். காலையிலேயே அவர்கள் பாஜக அலுவலகங்களில் கூடி இனிப்புகள் வழங்கத் தொடங்கினர். அதே நேரம் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.