ஹேர் ஸ்டைல்ஸ் ஹீரோக்களான பாஜக தலைவர்கள் : சமூக வலைத்தள கலக்கல்
பிரபல முடி திருத்தும் கடைகளின் உரிமையாளர் பாஜகவில் இணைந்ததையடுத்து பாஜக தலைவர்களின் ஹேர் ஸ்டைல் இனி எப்படி மாறும் என நெட்டிசன்கள் சித்தரித்துள்ளனர்.
இந்தியாவில் பிரபல ஹேர் ஸ்டைல் மற்றும் ஆடை அலங்கார கடைகளின் உரிமையாளராக திகழ்பவர் ஜாவத் ஹபீப். இவர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இவர் பாஜகவின் தன்னை இணைத்துக்கொண்டார். கட்சியில் இணைந்த பின்பு பேட்டியளித்த ஜாவத், “இத்தனை நாட்கள் நான் தலைமுடிக்கு காவலாளியாக இருந்தேன். இனிமேலிருந்து நான் தேசத்தின் காவலாளி ஆகப்போகிறேன்” என்று கூறினார்.
இந்நிலையில் இவர் பாஜகவில் இணைந்ததால், இனிமேல் பாஜக தலைவர்களின் ஹேர் ஸ்டைல் எப்படி மாறும் என நெட்டிசன்கள் சித்தரித்து ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். அது தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த சித்தரிப்பில் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்டோரின் ஹேர் ஸ்டைல் சித்தரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மொட்டையடித்திருப்பதற்கு பதிலாக முடியுடன் இருந்தால், எப்படி இருக்கும் என்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.