தவறுதலாக ஒலிக்கப்பட்ட தேசிய கீதம் ; வைரலாகும் காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் வீடியோ!

தவறுதலாக ஒலிக்கப்பட்ட தேசிய கீதம் ; வைரலாகும் காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் வீடியோ!
தவறுதலாக ஒலிக்கப்பட்ட தேசிய கீதம் ; வைரலாகும் காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் வீடியோ!

மகாராஷ்டிராவில் நேற்று நடைபெற்ற ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா நிகழ்ச்சியில் தேசிய கீதத்திற்குப் பதிலாக தவறான பாடல் சில நிமிடங்களுக்கு ஒலிபரப்பப்பட்ட வீடியோ வைரலாக பரவியது. இதனால் ராகுல்காந்தியை பாஜகவினர் விமர்சித்து வருகிறார்கள்.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை தற்போது மகாராஷ்டிராவின் அகோலா மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, விலைவாசி உயர்வு விவகாரத்தில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். "விவசாயிகளை அழிக்கும் நபர் ஒரு தேசபக்தராக இருக்க முடியாது. பிரதமர் மோடி கருப்பு பணத்திற்கு எதிராக போராடுவதாக கூறினார். தொலைக்காட்சியில் வந்து நோட்டு தடையை அறிவித்தார். நோட்டு தடை மற்றும் தவறான ஜிஎஸ்டி கொள்கைகள் அனைத்தும் சிறு மற்றும் நடுத்தர தொழில்களை அழிப்பதற்காகும்" என பேசினார்.

இந்த நிகழ்ச்சியின் நிறைவில் தேசிய கீதம் பாடல் ஒலிக்கயிருப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அனைவரும் எழுந்து நின்று ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என விதத்தில் , தேசிய கீதம் ஒலிபரப்பப்படும் என்றார்  ராகுல் காந்தி. 


அப்போது 'ஜனகன மன' பாடலுக்கு பதில் தவறுதலாக வேறு இசை சில நிமிடங்கள் ஓடியது. உடனடியாக ராகுல்காந்தி உட்பட தலைவர்கள், சைகை காட்டிநிறுத்த சொன்னார்கள். இசையும் நிறுத்தப்பட்டு பிறகு தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது.


இந்த நிகழ்வின் வீடியோவை பகிர்ந்த மகாராஷ்டிரா பாஜக தலைவர் நிதேஷ் ரானே, "பப்பு காமெடி சர்க்கஸ்' என்று ட்வீட் செய்துள்ளார். தமிழக பாஜகவைச் சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டியும் இதே வீடியோவைப் பகிர்ந்து, "ராகுல் காந்தி, இது என்ன?" என ட்வீட் செய்துள்ளார். மேலும் பல பாஜகவினர் இதை பகிர்ந்து வருகிறார்கள்.


” தவறுதலாக சில வினாடிகள் வேறு இசை ஒலிக்கப்பட்டது. அதை உடனடியாக நிறுத்தப்பட்டு தேசிய கீதம் ஒலிபரப்பானது. இது தற்செயலான சிறிய தவறு. இது மக்களுக்கு புரியும். ராகுல்காந்தி பாரத் ஜோடோ பயணம் மூலம் மக்களிடம் ஏற்படுத்தும் மாற்றத்தை சீர்க்குலைக்க தான் இதுபோன்ற சிறிய நிகழ்வுகளை வைத்து அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை வைத்து அரசியல் செய்கிறார்கள்” என காங்கிரஸ் தரப்பினர் பதில் கூறி வருகிறனர்.

மேலும், தேசிய கீதத்திற்கு பதிலாக வேறு இசை ஒலிக்கப்பட்டவுடன் ராகுல்காந்தி  உடனடியாக அதை நிறுத்தினார். ஆனால் பாஜகவினர் தேசிய கீதத்தையே தவறுதலாக பாடுகிறார்கள் என பாஜகவினரின் வீடியோகளை பகிர்ந்து நெட்டிசனங்கள், பாஜகவினரையும் விமர்ச்சித்து வருகிறார்கள். பாஜகவினரின் பழைய வீடியோவும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com